நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன்
வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
நடிகர் சிலம்பரசன் நடிக்கும் “அரசன்” திரைப்படத்தின் புரோமோ, “வடசென்னை” வெளியான நாளில் வெளியாகிறது.
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த கேங்ஸ்டர் படம், சிம்பு ரசிகர்களை கவரும் வகையில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தின் சில திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“வடசென்னை” திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இந்த புரோமோவில் இடம்பெறுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதலில், இந்த புரோமோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, “வடசென்னை” வெளியான அக்டோபர் 17 ஆம் தேதி யூடியூபில் “அரசன்” புரோமோ வெளியாகிறது.
வடசென்னை கதைக்களத்துடன் “அரசன்” உருவாகி வருவதால், இந்தத் தேதியை தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்துள்ளது.