வெளியிடப்பட்டது
:
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னையில் பனையூரில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய்யின் அடுத்த பயணம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஈரோட்டில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
கட்சித் தலைவர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் வரவில்லை.