வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேசம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பில் 232 ரன்கள் சேர்த்தது.
வங்கதேசத்தின் பேட்டிங்
ஷோர்னா அக்தர் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அவருடன் ஷர்மின் அக்தர் 50 ரன்கள், கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள், ஃபர்ஹானா ஹோக் 30 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகள், நடின் டி கிளர்க் மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்காவின் வெற்றி
233 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 49.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சோல் டிரையான் 62 ரன்கள், மாரிஸேன் காப் 56 ரன்கள், நடின் டி கிளர்க் 37* ரன்கள், லாரா வோல்வர்ட் 31 ரன்கள், அனிக்கா போஸ்ச் 28 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் நஹிதா அக்தர் 2 விக்கெட்டுகள், ரபேயா கான், ஃபஹிமா கட்டூன், ரிது மோனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்காவின் முன்னேற்றம்
இந்த வெற்றியால், தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தியா 4-வது இடத்துக்கு பின்னேறியது.