வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
சிம்புவின் ‘அரசன்’ படத்தின் புரோமோ, தனுஷ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ‘அரசன்’ எனும் கேங்ஸ்டர் திரைப்படத்தின் புரோமோ சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்டது.
இப்போது, இந்த புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், வடசென்னையின் மறைக்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்துவதாக கூறியதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புரோமோவில், சிம்பு, ‘என் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைங்க’ என்கிறார். இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், தெலுங்கு புரோமோவில், ‘என் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரை நடிக்க வைங்க’ என்கிற வசனம், என்டிஆர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.