சேலத்தில் இரட்டை கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த நபர் சுட்டு பிடிப்பு சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து, அவர்களின் உடல்களை கல்குவாரியில் வீசி விட்டுச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொலை செய்யப்பட்ட மூதாட்டிகள் மகுடஞ்சாவடி அருகே தூதனூர், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த பெரியம்மா (75) மற்றும் பாவாயி (70) ஆகியோரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. அவர்களின் நகைகள் […]