சேலத்தில் இரட்டை கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த நபர் சுட்டு பிடிப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து, அவர்களின் உடல்களை கல்குவாரியில் வீசி விட்டுச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டிகள்
மகுடஞ்சாவடி அருகே தூதனூர், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த பெரியம்மா (75) மற்றும் பாவாயி (70) ஆகியோரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. அவர்களின் நகைகள் திருடப்பட்டிருந்தன.
தனிப்படை அமைப்பு
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர்கள் செந்தில்குமார் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சந்தேக நபர் தேடுதல்
கருப்பூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவரை சந்தேகத்தின் பேரில் தேடி வந்தனர். மேலும், இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகர் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
குற்றவாளி பிடிப்பு
சங்ககிரி அருகே ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.