மொத்தம் 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 504 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, கம்யூனிஸ்ட் கூட்டணி 341 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக கூட்டணி 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
152 ஊராட்சி ஒன்றியங்களில் யுடிஎஃப் 79, எல்டிஎஃப் 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் 7, எல்டிஎஃப் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
87 நகராட்சிகளில் யுடிஎஃப் 54, எல்டிஎஃப் 28, என்டிஏ 1, மற்றவை 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
6 மாநகராட்சிகளில் யுடிஎஃப் 4, எல்டிஎஃப் 1, என்டிஏ 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. கோழிக்கோடு மாநகராட்சியை கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.