கென்யாவின் முன்னாள் பிரதமரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை விரட்ட, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது…படம் – ஏபி
வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
80 வயதான ரெய்லா ஒடிங்கா, கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது உடல் தனியார் விமானத்தில் கென்யா கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலி செலுத்த பலர் திரண்டனர்.
நைரோபியில் உள்ள விமான நிலையத்திலிருந்து 29 கி.மீ. தூரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், 60,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் வைக்கப்பட்டது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது, கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர்.
முன்னாள் பிரதமர் ஒடிங்காவின் மறைவுக்கு, அதிபர் வில்லியம் ரூட்டோ 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!