வெளியிடப்பட்டது
:
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06135), திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருச்செந்தூரிலிருந்து திரும்பும் ரயில் (எண் 06136) திங்கள்கிழமை (அக். 27) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.