வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
புதுதில்லி: ஹீரோ மோட்டோகார்ப், நோரியா மோட்டோஸுடன் இணைந்து ஸ்பெயின் சந்தையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளது.
இந்த புதிய முயற்சி, ஐரோப்பாவில் தனது நிலையை வலுப்படுத்துவதோடு, 50வது சர்வதேச சந்தையில் நுழைவதையும் குறிக்கிறது.
இதற்கிடையில், இத்தாலியிலும் எங்கள் பயணம் தொடரும். ஸ்பெயினில் எங்கள் அறிமுகம், ஐரோப்பா முழுவதும் எங்கள் பாதையை மேலும் வலுப்படுத்தும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சய் கூறினார்.
நோரியா மோட்டோஸ், ஸ்பெயின் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 30க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்களை கொண்டுள்ளது. எக்ஸ்-பல்ஸ் 200 4V, எக்ஸ்-பல்ஸ் 200 4V ப்ரோ மற்றும் ஹங்க் 440 போன்ற வாகனங்களை ஸ்பானிஷ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும் படிக்க: ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!