
தங்கம் விலை ANI
வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 97,000-ஐ கடந்த நிலையில், அதன் பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 90,800-க்கும், ஒரு கிராம் ரூ. 11,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலை, ஒரு சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 11,250-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.