நேற்று காலை 11.30 மணிக்கு தில்லி தீயணைப்பு படைக்கு முதல் அவசர அழைப்பு வந்தது. அதன் பின்னர், பல்வேறு இடங்களில் இருந்து உதவிக்கு அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரேலா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை 16 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதேபோல், போர்கர் தொழிற்பேட்டையில் உள்ள அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை 26 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் படிக்க: கேரளத்திற்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்!