கிருத்தி சனோன், தனுஷ்
வெளியிடப்பட்ட தேதி
:
புதுப்பிக்கப்பட்ட தேதி
:
நடிகை கிருத்தி சனோன், “தேரே இஷ்க் மெய்ன்” திரைப்படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து உருவாக்கிய மூன்றாவது படம் “தேரே இஷ்க் மெய்ன்”. இது “ராஞ்சனா” படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக கிருத்தி சனோன் நடித்துள்ளார். டிரைலர் வெளியீட்டில் அவரது நடிப்பு மற்றும் உடல்மொழி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.
இந்தப் படத்தைப் பற்றி கிருத்தி சனோன் கூறுகையில், “தேரே இஷ்க் மெய்ன் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் நீடித்தது. இது என் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.