விபத்தில் உயிரிழந்த சிறுத்தையை உடல்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லும் வனத்துறையினர்.
வெளியிடப்பட்ட தேதி
:
புதுப்பிக்கப்பட்ட தேதி
:
விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி மேம்பாலம் அருகே, சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதனால், சிறுத்தை அங்கு திடீரென உயிரிழந்தது.
வாகன ஓட்டிகள் உடனடியாக விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வனத்துறையினருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுத்தை உயிரிழந்ததற்கான விசாரணையை மேற்கொண்டனர். சிறுத்தையின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
சிறுத்தையின் வருகை: விக்கிரவாண்டி பகுதியில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் காணப்படாத நிலையில், திடீரென சாலையை கடக்க முயன்ற சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் சிறுத்தை எங்கிருந்து வந்தது, வேறு இடத்திலிருந்து வழிதவறி வந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.