கோப்புப்படம்.
வெளியிடப்பட்ட தேதி
:
புதுப்பிக்கப்பட்ட தேதி
:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணைக்கு பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகவே உள்ளது.
இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.