வெளியிடப்பட்ட தேதி
:
புதுப்பிக்கப்பட்ட தேதி
:
பிகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 25 வேட்பாளர்களை முதற்கட்டமாக அசாதுதீன் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லீஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்துள்ளது.
பிகார் சட்டமன்றத்தில் 100 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், இக்கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 2 இடங்கள் முஸ்லிம்கள் அல்லாத பகுதிகளாகும்.
இது தொடர்பாக AIMIM தனது எக்ஸ் தளத்தில் 25 வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான அக்தருல் இமாம் அமோர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
बिहार विधानसभा चुनाव के AIMIM प्रत्याशियों के नाम कुछ इस तरह हैं। इंशाअल्लाह उम्मीद है कि हम बिहार के सबसे मज़लूम लोगों की आवाज़ बनेंगे। यह सूची AIMIM बिहार यूनिट ने तैयार की है और इस सिलसिले में पार्टी की क़ौमी कियादत से भी मशविरा किया गया है।
We are happy to announce the list… pic.twitter.com/9ec1t4KpR2
– AIMIM (@aimim_national) October 19, 2025
மத்திய கயாவில் உள்ள சிக்கந்ரா ரிசர்வ் தொகுதியில் மனோஜ் குமார் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ. பிரஃபுல் குமார் மாஞ்சியுடன் அவர் மோதவுள்ளார்.
கடந்த தேர்தலில் AIMIM 19 இடங்களில் போட்டியிட்டது. 5 இடங்களில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | காங்கிரஸில் இணைந்தார் பாட்டியாலா முன்னாள் மேயர் சஞ்சீவ் சர்மா