வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்ந்துள்ளதாக IMF கணித்துள்ளது.
முந்தைய கணிப்பில் 6.4% ஆக இருந்த இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, தற்போது 6.6% ஆக உயர்ந்துள்ளது. 2026-27 நிதியாண்டுக்கான வளர்ச்சி 6.2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத தொடக்கத்தில் உலக வங்கியும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 6.3% இலிருந்து 6.5% ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.