நொய்டாவில் உள்ள அவரது வீட்டில் சிற்பி ராம் வி சுதார் புதன்கிழமை (டிசம்பர் 17) நள்ளிரவு காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிற்பி ராம் சுதாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், மறைந்த சிற்பி ராம் சுதாரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை வடிவமைத்த சிற்பி ராம் வி சுதார், அயோத்தி கோயிலின் ராமர் சிலை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தில்லி – ஷாங்காய் இடையே தினசரி நேரடி விமான சேவை! ஜனவரி 2 முதல்!