2009 முதல் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்: 2025-ல் எண்ணிக்கை எவ்வளவு? | TNNEWS

2009 முதல் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்: 2025-ல் எண்ணிக்கை எவ்வளவு? | TNNEWS

அவரது அறிக்கையில், 27 கடத்தல் வழக்குகளில் 169 பேர் கைது செய்யப்பட்டு, 132 பேருக்கு தேசிய புலனாய்வு ஆணையம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கூறியதாவது:

“2009 ஆம் ஆண்டிலிருந்து 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024 ஆம் ஆண்டில் 1,368 இந்தியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 2,036 பேர் பொதுவான விமானங்களிலும், 1,226 பேர் சிறப்பு விமானங்களிலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: ரஷிய அதிபர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!

2009 முதல் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *